வெளியானது நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” டீசர்

சூரரைப் போற்று படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் டீஸர் ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சூர்யா பல கெட்டப்புகளில் வருகிறார். சூர்யா ஆங்க்ரி யங் மேனாக வருகிறார். டீஸர் வித்தியாசமாக உள்ளது. படமும் அப்படியே இருந்தால் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இறுதிச்சுற்று படத்துக்குப் பின்னர் சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே