கருணாநிதி பெயரில் சிற்றுண்டி – புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜூலை 30க்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்தது.

அதன்படி இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் பெற முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின்னர் மத்திய அரசு இதற்கான எழுத்துப்பூர்வமான ஒப்புதலை அளித்தது.

அதன்படி இன்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவை நடந்தது.

அப்போது பல திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும்; அந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும் என்றும் கூறினார். 

இந்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் சிற்றுண்டி திட்டத்தை அறிவித்தது பெருமை அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “கலைத் தொண்டு மூலமாக ‘கலைஞர் கழகம்’ வளர்த்த புதுவையில் ‘புரட்சி முதல்வர்’ திரு. நாராயணசாமி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது. திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே