சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
அப்போது பேசிய அவர், “பயணிகள் ஏற்கெனவே வாங்கிய 1000 ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ம் தேதி வரை செல்லும்.
மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு என மூன்று கலரில் இலவச பஸ் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். தற்போது, சென்னையில் 1,792 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயக்கப்படும். மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.