கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டுமா..? காரணம் என்ன?

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை மற்றும் கர்ப்பம் தொடர்பாக எந்த ஒரு சிக்கல்களிலும் பாதிக்கப்படாதவரை அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் கர்ப்ப காலத்தில் செய்யலாம்.

உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் நல்லது. அதிலும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது காட்டாயம் சிறந்தது.  கர்ப்பம் தொடர்பான அறிகுறிகளான முதுகுவலி, வீங்கிய கணுக்கால் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் இரவில் நிம்மதியாக தூங்கவும் முடியும். கர்ப்பத்திற்கு முன்னும், கர்ப்பகாலத்திலும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது கர்ப்பிணி பெண்ணுக்கு உதவுவது மட்டுமல்லாமல், கருவில் இருக்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவதன் மூலம் குழந்தை ஆரோக்கியமான இதயம், குறைந்த பி.எம்.ஐ மற்றும் ஆரோக்கியமான மூளையுடன் பிறக்கக்கூடும் என்று சொல்லுவார்கள். இருப்பினும், உடற்பயிற்சி செய்வதில் நல்லதை போலவே சில தீங்கு விளைவிக்கும் விஷயங்களும் இருக்கின்றன. எனவே, எந்த சிக்கல்களையும் தவிர்க்க உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

குறைப்பிரசவ வரலாறு இருந்தால் உடற்பயிற்சி செய்யக்கூடாது:

உங்கள் முதல் குழந்தை 37 வார கர்ப்பத்திற்கு முன்பே பிறந்திருந்தால், இது முன்கூட்டிய பிரசவம் (Premature Delivery) என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன்பிறகு நீங்கள் எந்தவிதமான கடுமையான உடல் செயல்பாடுகளையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் தற்போதைய கர்ப்பத்தில் நீங்கள் முன்கூட்டிய பிரசவத்தை அனுபவித்திருந்தாலும் அதிக ஓய்வு எடுக்க உங்களுக்கு அறிவுறுத்தப்படும். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். அவர்கள் சில எளிதான பயிற்சிகளை உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

கருச்சிதைவின் வரலாறு அல்லது அறிகுறிகள்:

கருச்சிதைவு வரலாறு கொண்ட பெண்கள் அல்லது தற்போதைய கர்ப்பத்தில் இரத்தப்போக்கு அல்லது ஸ்பாட்டிங் இருப்பதைக் கண்டவர்கள் கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கருச்சிதைவைத் தவிர்ப்பதற்காக கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களுக்கு உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கிறார்கள். மேலும், நீங்கள் எந்த வகையான உடற்செயல்பாடுகளை செய்யலாம் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

நஞ்சுக்கொடி பிரச்சினைகள்

நஞ்சுக்கொடி பிரீவியா (Placenta Previa) விஷயத்தில், கடுமையான உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி, சுருக்கங்கள் அல்லது இரத்தப்போக்குகளைத் தூண்டும் என்பதால் உடல் செயல்பாட்டு அளவைக் குறைக்க பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. நஞ்சுக்கொடி பிரச்சனை உள்ள பெண்கள் முதல் மூன்று மாதங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் லேசான உடல் செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படலாம். இது அவர்களின் உடல்நிலையைப் பொறுத்தது வேறுபடும்.

இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள்

இதயம் மற்றும் நுரையீரல் நோய்களின் வரலாற்றைக் கொண்ட தாய்மார்கள் அனைத்து வகையான ஏரோபிக் பயிற்சிகளிலிருந்தும் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வகையான பயிற்சிகளில், இதயத் துடிப்பு அதிகரிக்கும் மற்றும் உடலின் ஆக்ஸிஜனின் தேவை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் பிற இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது அது சிக்கலில் முடியலாம்.

கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாத பயிற்சிகள் எவை?

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை மற்றும் கர்ப்பம் தொடர்பாக எந்த ஒரு சிக்கல்களிலும் பாதிக்கப்படாதவரை அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் கர்ப்ப காலத்தில் செய்யலாம். அது மிகவும் பாதுகாப்பானவை தான். நீச்சல், விறுவிறுப்பான நடைபயிற்சி, இண்டோர் ஸ்டேஷனரி சைக்ளிங் மற்றும் குறைந்த செயல்பாடுகளை கொண்ட பயிற்சிகள் ஆகியவரை உடற்பயிற்சி செய்ய விரும்பும் கர்ப்பிணிகளுக்கு சிறந்தது. இருப்பினும், குழந்தையின் பாதுகாப்பிற்காக அவர்கள் தவிர்க்க வேண்டிய சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளும் உள்ளன.

* கர்ப்பத்தின் 4வது மாதத்திற்குப் பிறகு உங்கள் முதுகு பக்கத்தை பிளாட்டாக தரையில் வைப்பது போன்ற உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே