மன சோர்வா ?? இந்த 5 விஷயங்களை செய்து பாருங்கள்..!!

மனநலம் அல்லது உளவியல் சாரந்த பிரச்சனைகளைப் பொதுவெளியில் கலந்துரையாடுவது என்பது நீண்டகாலமாக தவிர்க்கப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட முறையில்கூட ஒருவருக்கு இருக்கும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதற்கான இடம், வெளிப்படையாக இருப்பதாக தெரியவில்லை.

காரணம், தனிப்பட்ட உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கும்போது, வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவார் அல்லது மற்றவர்களிடம் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து சொல்வதற்கு கூச்சப்படுவார்.

ஒரு சிலர் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி எடுத்தாலும், பலரும் அமைதியான வாழ்க்கையை வாழ போராடி வருகின்றனர்.

ஆனால், உடனிருப்பவர்கள் அதனை சரியாக கவனித்து, ஆறுதலான சில செயல்கள் செய்தால் மனச்சோர்வில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும். 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

நலம் விசாரியுங்கள்

சோகமாக இருப்பவர்கள் அல்லது கவலைகளை எண்ணிக் கொண்டிருப்பவர்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உடனடியாக நீங்கள் நலமா? அக்கறையுடன் கேளுங்கள். ஒருவேளை அவருக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு உங்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் கூட போகலாம். ஆனால், உங்களின் கனிவான வார்த்தை மற்றும் நலம் விசாரிப்பு அவருக்குள் ஒருவித நிம்மதியான உணர்வை ஏற்படுத்தியிருக்கும். அது உங்களுக்கு தெரியாது.

தேவையை உணரவைத்தல்

அவர்களின் மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை புரியவையுங்கள். மனம்விட்டு அவர் அருகில் அமர்ந்து உரையாடும்போது, அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை எடுத்துக்கூறுங்கள். அவர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், அவர் ஏன் தேவை? என்ன செய்ய வேண்டும் என்பதை கூறும்போது நிச்சயம் அவருக்கான கவலைகளில் இருந்து விடுபட்டு வருவதற்கு உங்களின் உரையாடல் உதவியாக இருக்கும். உலகை புதிய பரிமாணத்தில் பார்க்கவும் வாய்ப்பு உள்ளது.

உணர்வை புரிந்து கொள்ளுதல்

மன அழுத்தம் அல்லது கவலையில் இருப்பவர்களை முன்கூட்டியே சில விஷயங்களின் அடிப்படையில் அவர் மீதான ஒருவித எண்ணங்களை ஏற்படுத்தி கொள்கிறோம். அதற்கேற்ப அவருடன் பேசும்போது, நீங்கள் இப்படி இருக்க வேண்டும்? எதனால் இப்படி மாறினீர்கள்? என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறோம். ஆனால், நாம் உண்மையில் அவருக்கு செய்ய வேண்டியது, அவர் சொல்லும் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். அவருக்கான பார்வைகளை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவர் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்து பார்த்து வார்த்தைகளை பேச வேண்டும்.

உடனிருத்தல்

மனச்சோர்வில் இருப்பவர்களுடன், உடனிருத்தல் என்பது மிகவும் முக்கியம். மிகவும் கஷ்டமான காலகட்டங்களில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதால், பேசவில்லை என்றாலும் நம்பிக்கையாக உடன் இருப்பது அவசியம். நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள், எப்போதும் விட்டு செல்ல மாட்டீர்கள் என அவர்கள் நம்பும் அளவுக்கு நீங்கள் நடந்து கொள்ளுங்கள். உங்களின் இருப்பு மனதளவில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.

மறுபரிசீலனை

நீங்கள் நலம் விசாரித்தவுடன் அவர்களை விட்டு சென்றுவிட வேண்டாம். ஒருவேளை நலமா? என்று நீங்கள் கேட்டால், கவலையில் இருப்பவர் நலம் என்றுதான் கூறுவார். ஆனால், ஒருமுறைக்கு இருமுறை அவருடன் இருந்து உண்மையை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வெளிப்படையாக இருவரும் பேச வேண்டும் என்பதை எடுத்துக்கூறி அவரின் உண்மையான மனநிலையை அறிந்துகொண்டு மனக்கவலையில் இருப்பவரை விட்டு செல்லுங்கள்.

உங்களின் அணுகுமுறை, மிகப்பெரிய பிரச்சனைகளில் இருந்து அவர் வெளியே வருவதற்கு உதவியாக இருக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே