சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது.

இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது.

இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.126 குறைந்து, ரூ.5,040-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.70 காசுகள் குறைந்து ரூ.72.70க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.72,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே