கமல்ஹாசனுக்கு, சிவாஜி கணேசன் குடும்பத்தினர் விருந்து அளித்து மரியாதை

நடிகர் கமல்ஹாசன் திரை உலகத்திற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிவாஜிகணேசன் குடும்பத்தினர் அவருக்கு விருந்து அளித்து மரியாதை செய்தனர்.

கமல்ஹாசன் சினிமாவில் கால் பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு ரசிகர்கள், அவரது கட்சி தொண்டர்கள், திரையுலகினரும் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் கமல்ஹாசனை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து மதிய உணவு அளித்ததுடன், நினைவு பரிசையும் வழங்கி கவுரவித்தனர்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்துடன், நிறைய அன்பும் பரிமாறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடல் இன் வாசகங்களை தம்மை கண்கலங்க செய்ததாகவும், மனது புன்னகைத்ததாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே