‘இவர் வென்றால் அமெரிக்காவுக்கே அவமானம்’ – அதிபர் டிரம்ப் சொல்வது யாரை?

கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் அதிபரானால் அது நாட்டுக்கு ஏற்படும் அவமானம் என அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரிஸை விமர்சனம் செய்துள்ளார்.

அவரை மக்கள் யாரும் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானால், அது நாட்டுக்கு பெரிய அவமானம் என கடுமையாக விமர்சித்துள்ளார்,

அவர் மேலும் கூறுகையில், ‘ஜோ பிடன் வெற்றி பெற்றால், சீனாவும் வெற்றி பெறும். உலக வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவை மேம்படுத்தியுள்ளோம்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனாவால் பொருளாதாரம் முடங்கியது.

தற்போது அதனை மீண்டும் திறந்துவிட்டு, பழைய நிலைக்கு திரும்பி வருகிறோம்.

ஜோ பிடன் பதவியேற்றால் அமெரிக்கா வீழ்ச்சியடையும். அதேபோல் கமலா ஹாரிஸை மக்கள் யாரும் விரும்பவில்லை.

அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானமாகதான் இருக்கும்’ என்றார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே