சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி முதல் சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்மார்ட் கார்டு மற்றும் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை – சென்ட்ரல், விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை போன்ற வழிதடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் முக கவசம், சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீடிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. 

ஏற்கனவே காலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் மெட்ரோ ரயில் சேவை இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே