புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஷாருக்கான் பெயர் (வீடியோ இணைப்பு)

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

நடிகர் ஷாருக்கான் நேற்று தனது 54-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.

அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

HAPPY BIRTHDAY TO THE KING OF BOLLYWOOD SHAH RUKH KHAN

இந்நிலையில் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் HAPPY BIRTHDAY TO THE KING OF BOLLYWOOD SHAH RUKH KHAN என வண்ணமயமாக ஒளியூட்டப்பட்டதுடன், கட்டடத்தின் முன்பாக செயற்கை நீரூற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே