பாலியல் வன்கொடுமை – பாஜக குஷ்பு ட்வீட்..!!

பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகமோ அல்லது உ.பி யோ அல்லது எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் இன்றி சட்டப்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 

இத்தகைய சம்பவங்களில் சமூகத்தில் கண்ணியமாக வாழும் பெண்ணின் உரிமை பறிக்கப்படுவதுடன், வாழ்நாள் முழுக்கவே அவள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே