இந்தியாவிலேயே மிகத் தூய்மையான நகரம் என்ற பெருமையை, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்தூர் நகரம் ஐந்தாவது முறையாக பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
புது தில்லியில் இன்று நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுவச் சர்வேக்ஷான் 2021ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.
குஜராத்தின் சூரத் இரண்டாவது தூய்மை நகரமாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மூன்றாவடு இடத்தையும் பிடித்துள்ளன.
அதுபோல, நாட்டிலேயே, மிகத் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் மாநிலம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.