கன்னியாகுமரி கொரோனா சிகிச்சை மையத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி சுகாதாரத்துறை விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேர் இன்று (28/03/2020) ஒரே நாளில் உயிரிழந்தனர்.

ஏற்கனவே இரண்டு பேர் இறந்த நிலையில் இன்று (28/03/2020) முட்டத்தை சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை, திருவட்டார் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர், ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்த 66 முதியவர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில்

  • இரண்டு வயது ஆண் குழந்தைக்கு பிறவி எலும்பு நோய் (Osteopetrosis) காரணமாக உயிரிழந்தது. 
  • 66 வயது ஆண் நெடுநாள் சிறுநீரக நோய் (Chronic Kidney Disease/Uremic Encephalopathy/Lymphoma)காரணமாக உயிரிழந்ததாகவும்,
  • 24 வயது இளைஞர் நிமோனியா (Pneumonia) தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுத்தன்மை (Sepsis) காரணமாக உயிரிழந்தார்.

மேற்குறிப்பிட்டுள்ளவர்களின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் SOP- ன் படி கரோனா வைரஸ் தொற்று நோய் (COVID- 19) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே