சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்திருக்கிறது.

பொதுமுடக்க காலத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டியதை அனைவரும் அறிவோம்.

அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தின் மீது முதலீடு செய்ய வழிவகுத்து.

முதலீட்டாளர்களும் அமெரிக்க டாலர்கள், பங்குச் சந்தை என போகாமல் முதலீடுகளை பாதுகாக்கும் பொருட்டு தங்கத்திலேயே முதலீடு செய்தனர்.

தற்போது கொரோனா பீதி குறைந்து, அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்திருக்கிறது. இது தங்கம் விலை சரிவில் எதிரொலிக்கிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4,181க்கு விற்பனையாகிறது.

அதன் படி, சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,800க்கும் விற்பனையாகிறது.

கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே