கொடைக்கானலில் உள்ள படகு குழாமிற்கு சீல் வைப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து கொடைக்கானல் ஏரியில் உள்ள தனியார் படகு குழாமிற்கு சீல் வைக்கப்பட்டது. 

கொடைக்கானல் ஏரி பகுதியில் அமைந்துள்ள தனியார் படகு குழாமின் குத்தகை ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியுடன் முடிந்த நிலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும்,  ஏரிக்கு அருகில் 8 சென்ட் நிலத்தை மட்டுமே ஒப்பந்தத்திற்கு எடுத்த நிலையில் 10 ஆயிரம் சதுரஅடி நிலத்தை ஆக்கிரமித்து படகு குழாம் மற்றும் கடைகள் அமைத்த புகாரில் அதற்கு சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கொடைக்கானல் ஏரியில் உள்ள படகு கிழாமிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே