ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது; ஏப்.1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டபேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அனைத்து பள்ளிகளும், குறிப்பாக 9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் மூடப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ஜனவரி மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டது.

மே 3ம் தேதி 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனவால் பாடங்களை நடத்த முடியாத சூழல் உள்ளது. 

இருப்பினும் பாடத்திட்டங்களை குறைத்து, பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் அன்றைக்கு மட்டும் அனைத்து பள்ளிகள் இயங்காது, அதன்பிறகு பள்ளிகளை நடத்த எந்த இடையூறும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஒருபுறம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே