திருச்சி அரசு கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து மட்டுமே நாள்தோறும் 84% புதிதாக பாதிப்பு பதிவாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமே தெரிவித்து விட்டது.

இதனிடையே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், விடுதிகளில் தங்கி இருப்போர் என பலருக்கு பாதிப்பு பரவி வருவதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை கையிலெடுத்துள்ளது.

குறிப்பாக, பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. 

அதே போல, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அதிரடியாக ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

250 பேரிடம் சோதனை நடத்தியதில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அக்கல்லூரி மூடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே