ஜெரூசலேம் புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000-த்தில் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் மேலும் பேசிய அவர் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் உறுதியளித்தார்.
முன்னதாக, தமிழகத்தில் அரிசி அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி சனிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.