பிரேசில் நாட்டின் அமேசானிய செயற்கைக்கோள் மற்றும் 18 சிறிய வகை செயற்கைக்கோளுடன் இன்று காலை பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கேட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி – 51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இதற்கான கவுன்டவுன் நேற்று காலை 8 மணி 54 நிமிடத்திற்கு தொடங்கியது.

இந்த ராக்கெட்டில் பிரேசிலின் அமேசானிய 1 (Amazonia 1) முதன்மை செயற்கைக்கோள் மற்றும் 18 சிறிய வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் ‘அமேசோனியா – 1’ செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

இதனுடன் இந்தியத் தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக் கோள்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள்களும் இடம்பெற்றுள்ளன.

‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தின் மூலம் இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே