மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது
2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4. இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.
5. மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.
6. ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி;
7. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகளுக்கு அனுமதி!
8. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி! தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!
9. தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.
10. மீன், இறைச்சிக் கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. மீன் பிடித்தல், மீன் சார்ந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11. மேலும் வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள்,ஏ.டி.எம்.கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12. ஏப்ரல் 20க்கு பிறகு, 100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள அனுமதி. ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
13. மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்
14. ஆட்டோ, கால் டாக்சி, ரிக்ஷா உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும்.
15. கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.