SC , ST வழக்குகளில் உடனடி கைதுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், உடனடி வழக்குப் பதிவு மற்றும் கைது நடவடிக்கைக்கு விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும்போது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுவதோடு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.

ஆனால் இதற்கான சட்டப் பிரிவை தளர்த்தும் வகையில் 2018ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவை மாற்றியமைக்கும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது

வழக்குப் பதிவு செய்வதற்கும், கைது நடவடிக்கைகக்கும் முன்அனுமதி பெறவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டியது சட்டமன்ற நாடாளுமன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும், அதை உச்சநீதிமன்றம் செய்திருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே