JUST IN : ராகுல்காந்தி மீதான வழக்கு முடித்துவைப்பு – உச்சநீதிமன்றம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில், பிரதமர் மோடியை விமரிசித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி, நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய நிலையில், அவர் மீதான வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், ராகுலுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதாவது நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடியை “காவலாளியே திருடன்” என கூறியதாக ராகுல் காந்தி கூறியிருந்தது கடும் சர்ச்சையான நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால் இந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே