அதிக வெள்ளைப்போக்கு முதல் மாதவிடாய் வரை சரிசெய்யும் கற்றாழை சூரணம் தயாரிப்பும் பயன்பாடும்!

கற்றாழை கோடைக்கேற்ற பானமாக இப்போது புத்துயிர் பெற்றாலும் இவை பெண்களின் நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவே இருந்துவருகிறது.
அதிக வெள்ளைப்போக்கு முதல் மாதவிடாய் வரை சரிசெய்யும் கற்றாழை சூரணம் தயாரிப்பும் பயன்பாடும்!
ஹைலைட்ஸ்:
ஜெல்லோடு கருப்பட்டி கலந்து பாகுபதம் வரும் அப்போது தோல் உரித்து சுத்தம் செய்த பூண்டையும் சேர்த்து
தினமும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துகொள்ள வேண்டும்.
கற்றாழை சுலபமாக கிடைக்ககூடிய பொருள். தோற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் இவை செய்யும் நன்மைகள் பலவும் சொல்லிகொண்டே இருக்கலாம்.

உடலில் அழற்சியை தடுக்க கற்றாழை சாறு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் புற்றுநோய் வரை தடுக்ககூடிய சக்தியை கற்றாழை மூலம் பெறலாம். இனி கற்றாழையைத் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.

கற்றாழையில் செய்யப்படும் கற்றாழை சூரணமானது பெண்களுக்கு அதிகம் பயன் தரக்கூடியது. அதனாலேயே கற்றாழையை குமரி கற்றாழை என்று அழைக்கிறார்கள். இந்த கற்றாழை சூரணம் பெண் பிள்ளைகள் பூப்படைந்த பிறகு கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். அப்படி தயாரிக்கப்படும் சூரணத்தை குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் பயன்கள் குறித்தும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

அஜீரண கோளாறை உடனே விரட்டி அடிக்கும் பாட்டி கால அன்னப்பொடி, தயாரிப்பும் பயன்பாடும்!

கற்றாழையை தோல் நீக்கி உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை மட்டும் 7 முதல் 8 முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் கெடுதல் தரும். கற்றாழையின் கசப்பு தெரியாமல் இருக்கவே கற்றாழையை இத்தனை முறை தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும்.
தேவை
கற்றாழை ஜெல் – 1 கப்,
பனங்கருப்பட்டி – 1 கப் ( இனிப்பு தேவையெனில் சற்று கூடுதலாக பயன்படுத்தலாம்)
பூண்டு – அரை கப் (தோலுரித்தது)

முதல் முறை செய்யும் போது கற்றாழையை சிறிதளவு மட்டும் எடுத்து செய்ய பழகுங்கள். கற்றாழை ஜெல்லுக்கேற்ப சம அளவு அல்லது சற்று கூடுதலாக பனங்கருப்பட்டியை எடுத்துகொள்ள வேண்டும். கற்றாழை கசப்பு நீங்கி கழுவிய பிறகு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து சிறிது சிறிதாக பனங்கருப்பட்டி தூள் சேர்க்கவும்.

ஜெல்லோடு கருப்பட்டி கலந்து பாகுபதம் வரும் அப்போது தோல் உரித்து சுத்தம் செய்த பூண்டையும் சேர்த்து சிறிது சிறிதாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருந்தால் பூண்டு பல் நன்றாக மசிந்துவிடும். பூண்டு மசித்த பிறகு இறக்கி மத்து கொண்டு நன்றாக கடைந்தெடுத்தால் அல்வா பதத்துக்கு தயாராக இருக்கும். கவனம் அடிபிடிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும்.
பெண் பிள்ளைகள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு இதை சாப்பிட்டு வர வேண்டும். தினமும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துகொள்ள வேண்டும். தினமும் இதை எடுத்துவந்தால் வெள்ளைப்படுதல் சீராக இருக்கும். அதிக வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து இது.
மாதவிடாய்க்க் கோளாறுகள் இருப்பவர்கள், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பவர்கள், சிறுநீர்க்கடுப்புக்கு உள்ளாபவர்கள் போன்ற பிரச்சனை இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இவை பலன் தரும். இந்த பிரச்சனைகள் இருந்தால் தான் கற்றாழை சூரணம் சாப்பிட வேண்டுமென்பதில்லை அனைவருமே இதை எடுத்துகொள்ளலாம். அதே போன்று ஆண்களும் இதை சாப்பிடலாம். இதனால் உடல் சூடு தணிந்து விடும்.

வளரும் பிள்ளைகளுக்கு சமயத்தில் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் நாள் ஒன்றுக்கு ஒருமுறை சிறிதளவு கொடுத்து பரிசோதிக்கவும். மற்றபடி பெண்பிள்ளைகள் பூப்படைந்த நாள் முதல் இதை கொடுத்துவந்தால் கர்ப்பப்பை பிரச்சனையில்லாமல் இருக்கும். கற்றாழை எளிதில் கிடைக்க கூடிய பொருள் என்பதால் தாமதமின்றி இன்றே செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே