கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தின் கலெக்டர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தனது காருக்கு ரோட்டில் வைத்து தானே ஸ்டெப்னி மாறியுள்ளார், இதைக் கண்டு பொதுமக்கள் பலரும் வியந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருப்பவர்தான் ரோஹினி சிந்தூரி. நேர்மையான தனது நடத்தையால், அதிரடியான நடவடிக்கை எடுப்பவராக இருப்பதாலும்; மக்கள் பலரும் விரும்பக்கூடிய ஒரு மாவட்ட ஆட்சியரகத்தில் ரோகிணி திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகினி மால் ஒன்றுக்கு சுடிதாருடன் தனது விடுமுறையை கழிப்பதற்காக சாதாரணமாக தனது காரில் சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென தனது கார் டயர் பஞ்சர் ஆகவே, தன் காரில் இருந்த ஸ்டெப்னி எடுத்து மாட்டிக் கொண்டு இருந்துள்ளார்.
அதனை கண்ட பொது மக்களில் ஒருவர் இவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரிடம் சென்று நீங்கள் மாவட்ட ஆட்சியர் தானே என கேட்க, அவர் சாதாரணமாக திரும்பி சிரித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் இவ்வளவு சாதாரணமாக ரோட்டில் ஸ்டெப்னி மாட்டி கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் பலரும் வியந்து அவரிடம் சென்று பேசியுள்ளனர்.
மேலும் இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.