கங்கணா வீடு இடிக்கப்பட்டது குறித்து சிவசேனா அரசில் கூட்டணி வகிக்கும் சரத்பவார் கருத்து

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்து அவருக்கு மும்பை மாநகராட்சி தேவையில்லாத விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளதாக மஹாராஷ்டிராவில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் நடிகை கங்கனா ரணாவத், மாநகராட்சியின் ஒப்புதலை பெறாமல், அலுவலகத்தில் மாற்றங்கள் செய்ததாக கூறி, அலுவலகத்தில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.

அவர் இல்லாத நேரத்தில், அந்த அலுவலகத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்தனர்.

இந்த நோட்டீசுக்கு எதிராக கங்கனா தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அலுவலகத்தை இடிக்க தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியதாவது:

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்தது, அவருக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளது. 

அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவத்தை, மீடியாக்கள் பெரிதுபடுத்தியுள்ளன.

ஆனால், இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்திருக்க வேண்டும். மும்பையில் சட்டவிரோத கட்டுமானம் என்பது புதிய விஷயம் அல்ல.

ஆனால், தற்போது எழுந்துள்ள சர்ச்சை பின்னணியில், நடவடிக்கையில் ஈடுபட்டது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனால், மும்பை மாநகராட்சிக்கு சொந்த காரணங்கள் மற்றும் விதிகள் உண்டு.

அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே