JUST NOW : சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

சூல் நாவலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ. தர்மன். இவர், எழுத வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன.

இதுவரை மூன்று நாவல்களை மட்டுமே எழுதியிருக்கிறார். கடைசியாக இவரது `சூல்’ நாவல் 2015-ல் வெளியானது.

எழுத்தாளர் சோ. தர்மன் கூகை என்கிற நாவலின் வழியே தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்தார். இவரின் கூகை தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதையும் பெற்றுள்ளது.

வேளாண் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இவரின் எழுத்துக்கள் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட நூல்களையும் படைத்துள்ளார்.

தென் மாவட்டம் குறித்து விவரிக்கும் “சூல்” நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பபை பெற்றது.

தற்போது நான்காவது நாவலான “பதிமூன்றாவது மைய வாரியம்” என்ற நாவலை அச்சுக்கு அனுப்பிவிட்டு, சிறுகதைகள் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

அவருடைய சூல் நாவலுக்காக மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே