நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனையா..??

அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குறித்த எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் சில நிமிடங்களில் காட்டுத் தீயாக பரவி விடும்.

அந்த வகையில் நடிகர் அஜித்திடம் மேனேஜராக பணியாற்றும் சுரேஷ் சந்திரா 3 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாகவும், அதற்கு உணவாக அவர் எலிகளை கொடுத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இத்தகவலை அறிந்த வனத்துறை அதிகாரிகள் சுரேஷ் சந்திராவின் வீட்டு முகவரி தெரியாத காரணத்தால் திருவான்மியூரில் இருக்கும் நடிகர் அஜித் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு சுரேஷ் சந்திராவின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதாகவும், அவர் பாம்பு வளர்த்து வருவது உண்மையா என்பதைக் கண்டுபிடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே நடிகர் அஜித் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தொலைக்காட்சி சார்பில் சென்னை வனத்துறை தலைமையிட வனசரகர் மோகனிடம் விசாரித்த போது, அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக கூறுவது பொய்யான செய்தி என்றும்; அவரது மேனேஜரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில் என்னுடைய வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே