மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 31 ஆவது நாளாக தொடா் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 30 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

அதைத் தொடா்ந்து நடைபெறவிருந்த 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது.

மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு அனுப்பிய பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்தன. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்குமாறு மத்திய அரசு விடுத்த அழைப்புகளையும் விவசாயிகள் நிராகரித்தனா்.

விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தொடா்ந்து தெரிவித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், யார் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறினார்.

இந்நிலையில், தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 31 ஆவது நாள்களாக தொடர்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தில் பல ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு வருவதால் ரயில்வே துறைக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே