எந்தவித ஆரவாரமும் இல்லாமல், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

ஆன்மீக சுற்றுலா தலமான வேளாங்கண்ணி எப்பவுமே அமர்க்களமாக காணப்படும்..

புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அங்கு உள்ளதால், மிக சிறந்த மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக அது திகழ்ந்து வருகிறது..

அந்த சர்ச் பார்ப்பற்கே அழகாக இருக்கும்.. கட்டிட வேலைப்பாடுகள் அந்த அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்..

இந்த சர்ச்சிற்கு அனைத்து மதத்தினரும் எந்த வேறுபாடும் இன்றி சென்று வருவது வழக்கம்.. அதனால் கிறிஸ்துமஸ் காலங்கள் என்றில்லாமல், வழக்கமாகவே இங்கு கூட்டம் நிறைந்து காணப்படும். 

அதிலும், இங்கு நடைபெறும் பேராலய ஆண்டுத்திருவிழா என்றால் வெகு சிறப்பானது.. தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.

ஆனால் தற்போது லாலாக்டவுன் என்பதால், வேளாங்கண்ணியில் மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை..

பொது போக்குவரத்தும் இல்லாததால் மொத்தமாகவே இந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது… இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது..

நாகையில் அதிக அளவு தொற்று பரவி வருகிறது.. அதனால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், மக்களே இல்லாமல்தான், ஆரோக்கியமாதா பேராலயத்தின் இந்த வருட திருவிழா துவங்கி உள்ளது.. ஆம்.. இன்று மாலை கொடியேற்றத்துடன் தேவாலய விழா தொடங்கியது..

அன்னையின் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார்… பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இந்த விழா நடக்கவிருக்கிறது.. நோய்த்தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

ஏற்கனவே லாக்டவுன் அமலில் இருந்தாலும், இ-பாஸ் உள்ளதால், மக்கள் எங்கே குவிந்துவிடுவார்களோ என்று நினைத்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அங்கு ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பக்தர்கள் வருகையை தடுக்க மாவட்ட எல்லைகளில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது…

வரலாற்றிலேயே முதல்முறையாக பக்தர்கள் இல்லாமல், எந்தவித சத்தமும் இல்லாமல்.. அமைதியாக அன்னையின் கொடி ஏற்றப்பட்டுள்ளது!

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே