சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.5,242க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்மையில் ரூ.43,000த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 42,000 ரூபாய்க்கு கீழே குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.42,512க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.5,314க்கு விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது.
கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது.
இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விற்பனை ஆகும். இந்த நிலையில், தங்கத்தை விலை இன்று ஒரே நாளில் 984 ரூபாய் குறைந்தது.