விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு உதவும் ரஷ்யா

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு உதவும் வகையில் 4 விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்க உள்ளது.

இதற்காக அவர்கள் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கின்றனர். அங்குள்ள யூரி காகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் 4 பேருக்கும் பயிற்சியளிக்கப்பட உள்ளது.

இந்திய – ரஷ்யா கூட்டுறவால் இத்திட்டம் வரும் 2022ம் ஆண்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக விண்வெளி ஆய்வுகளில் நீண்ட அனுபவம் மிக்க ரஷ்யா, இந்திய விஞ்ஞானிகளுக்கு தனது தொழில்நுட்ப மற்றும் அனுபவ ரீதியான பயிற்சிகளை அளிக்க முன் வந்துள்ளது.

கடந்த வாரம் மாஸ்கோ சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களுக்கான ரோக்கோஸ்மோஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டிமிட்ரியுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே