குஜராத் மாநிலம் சூரத்தில் கோல்டு காரி என்ற பெயரில் தங்கத்திலான இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்வீட் ஒரு கிலோ ரூ.9,000க்கு விற்கப்படுகிறது. இந்த இனிப்பு மூலம் ஆயுர்வேதத்தில் தங்கத்தின் பயன் குறித்து எடுத்துரைக்கும் விதமாக செய்யப்பட்டுள்ளது.

ஷரத் பூர்ணிமா விழாவிற்கு பிறகு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படும் சாண்டி பட்வோவுக்கு முன்னதாக இந்த இனிப்பு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் சந்தை மந்தமாக இருப்பதால் இதற்கான தேவை குறைவாக உள்ளது . ஆனால் வரும் நாட்களில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே