கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும்; உரிய மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே