இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 955 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக 43,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,05,02,362 ஆக உயர்ந்தது.
* புதிதாக 955 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 52,299 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2.96.58.078 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,85,350 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 35,12,21,306 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.