56 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் உத்தரவு..!!

கொரோனா காலக்கட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதி திரட்டப்பட்டது.

அந்த நிதியில் இருந்து விபத்து, பாம்புக் கடி, மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழக்கும் காவலர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில், உயிரிழந்த 121 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியும் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் 37 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியும் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியும் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உடல்நலக்குறைவு, விபத்தில் இறந்த மேலும் 56 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், பொது நிவாரண நிதியில் இருந்து நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே