அழிக்கப்பட்ட CCTV காட்சிகளை மீட்க நடவடிக்கை : CBCID IG சங்கர்

சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை உறுதி என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐஜி சங்கர், கைது செய்யப்பட் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரவிகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஐந்துபேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஐஜி சங்கர் கூறினார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருகந்தாலும், ஆதாரம் கிடைத்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் ஐ.ஜி.சங்கர் உறுதியளித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே