வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர தற்போதுள்ள இ-பாஸ் முறையே தொடரும்..!!

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தற்போதுள்ள இ-பாஸ் முறையே தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, தொலைபேசி எண், ஆதார் அல்லது டேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள இ-பாஸ் நடைமுறையில் வரும் 17ம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இ-பாஸ் அனுமதி எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க எதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார். எனவே தேவையற்ற பயணத்தை தவிர்த்து, பொறுப்புடன் நடந்து கொள்ள மக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் 17 ம் தேதி அமல்படுத்தப்படும் இ-பாஸ் தளர்வுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே, தவிர பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பழைய நடைமுறையே தொடரும் என அறிவித்துள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே