கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!!

கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கருப்புப் பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை வாங்க இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கருப்புப் பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை வாங்க கரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு இதுவரை ரூ.280.26 கோடி நிவாரணமாக வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே