கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி..!!

சென்னை அருகே காவல் துறையில் பணியாற்றுவதாக கூறி பெண்ணிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டை பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி பிரியா. திருமணமான இவர் இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கணவருடன் விவாகரத்து பெறாத நிலையில் விவாகரத்து வாங்குவதற்கு தனக்கு உதவி புரியுமாறு தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த மதன்குமார் என்ற நபரை நாடியுள்ளார். அவர் தான் புழல் சிறையில் ஜெயிலராக பணியாற்றி வருவதாக கூறி லட்சுமி பிரியா ஏமாற்றியுள்ளார்.

மேலும், தனக்கு தெரிந்த பிரபல வழக்கறிஞர் மூலம் விவாகரத்து பெற்று தருவதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார்.

லட்சுமி பிரியாவும் அதை நம்பி ரூபாய் 13 லட்சம் வரை அவரிடம் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விவாகரத்து வாங்கி தராமல் மதன் குமார் ஏமாற்றி வருவதை உணர்ந்த லட்சுமி பிரியா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, கொலை செய்துவிடுவேன் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அச்சமடைந்த லட்சுமி பிரியா போலீசாரின் உதவியை நாடியுள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் மதன் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே