இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பொறுப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே அல்லது வி.வி.எஸ். லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு மாற்று என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த மாற்றம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகாக நடக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2016 – 17 வாக்கில் ஒரு ஆண்டுக்கும் குறைவாக கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இயங்கியுள்ளார்.

அப்போது கோலி உடனான கசப்பான அனுபவங்களை தொடர்ந்து அவர் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியம் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே அல்லது லக்ஷ்மனை நியமிக்க விரும்புவதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை பயிற்சியாளராக நியமிப்பது இரண்டாவது ஆபிஷன் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்ப்ளே மற்றும் லக்ஷ்மன் என இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்கள்.

அதே நேரத்தில் பயிற்சியாளர் ரோலுக்கும் பொருந்தி போவதால் அவர்கள் இருவரில் ஒருவர் அடுத்த பயிற்சியாளராவது உறுதி என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே