கொரோனா சிகிச்சை: மாணவர் விடுதிக்கு பதில் கலையரங்கத்தை ஒப்படைக்க தயார்..!!அண்ணா பல்கலைக்கழகம்…!!!

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்கு மாணவர் விடுதிக்கு பதில் கலையரங்கத்தை சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைக்க தயார் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உட்பட்ட 4 மாவட்டங்களிலும் கடும் பட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியை இன்று மாலைக்குள் ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் பிரகாஷ் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ஏற்கனவே பெரும்பாலான மாணவர் விடுதிகள் மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், கூடுதலாக பி.எச்டி ஆய்வு மாணவர் விடுதிகளையும் ஒப்படைக்க கோருவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். பி.எச்.டி. ஆய்வு மாணவர்களின் உடைமைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஆய்வு தொடர்பான பொருட்கள் தொலைந்துபோனால் யார் பொறுப்பாவது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆய்வு மாணவர் விடுதிக்கு பதில் விவேகானந்தர் கலையரங்கத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க தயார் என்றும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட தரமணியில் அமைந்துள்ள மாணவர் விடுதியும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கங்ளாக மாற்றப்பட உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே