ஆயிரம் ரூபாய்க்கான அரசு பஸ் பாஸ் ஜூலை 26ஆம் வரை செல்லும் தேதி வரை செல்லும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகை பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை வைத்து மாநகர பேருந்துகள் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த பஸ் பாஸுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 26ஆம் தேதி வரை ஆயிரம் ரூபாய் பஸ்களை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே