அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது…

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடு பிடி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

700 காளைகளும், 921 காளையர்களும் அலங்காநல்லூரில் களம் காணுகின்றனர்.

அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டில், சுகாதாராத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகளும் களம் கண்டன.

நின்று விளையாடிய அமைச்சரின் சின்னகொம்பன் காளை, காளையர்களிடம் சிக்காமல் மிரட்டல் காட்டியது.

இலங்கை அமைச்சர் தொண்டைமான் காளையும் அலங்காநல்லூரில் சீறிபாய்ந்தது.

அவனியாபுரத்தில் காளையர்களை திணறவிட்ட காவல் ஆய்வாளரின் அணுராதா காளை, அலங்காநல்லூரிலும் அலறவிட்டது.

முன்னதாக, முதலில் 4 கோயில் காளைளுடன், ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்கள் சார்பில் ஒரு காளையும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.

ஒய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு கார், பீரோ, சைக்கிள், உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பரிசுகளை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்குகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே