சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தனர்.

13-வது ஐபிஎல் சீசனின் 40-வது ஆட்டத்தில் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் துபையில் இன்று (வியாழக்கிழமை) விளையாடு வருகின்றது.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ், உத்தப்பா களமிறங்கினர். இந்நிலையில், ஆட்டத்தின் 3வது ஓவரில் உத்தப்பா 19 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார்.

பின் இணைந்த ஸ்டோக்ஸ்-சாம்சன் ஜோடி அணியின் ரன்னை சீராக உயர்த்தினர், அப்போது சாம்சம் ஹோல்டர் பந்தில் 36 ரன்களுக்கு போல்டானார். அடுத்த ஓவரிலேயே ரஷித் பந்தில் ஸ்டோக்ஸ் (30) அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய பட்லர் (9), கேப்டன் ஸ்மித் (19) மற்றும் பராக் (20) சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியின் ஆர்சர் 16 ரன்களுடனும், திவாட்டியா 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே