திரையரங்குகள் திறக்கப்படும்போது கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி – அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலைப் பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும்.

நடிகர்கள் சம்பள விவகாரத்தில் அரசு தலையிட முடியாது, அவர்களே முடிவு செய்ய வேண்டும். இது தயாரிப்பாளர் இயக்குநர், விநியோகஸ்தர் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் ” என்றார்.

முன்னதாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முதல்வரிடம் ஆலோசித்து வருவதாக கூறினார்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்தனர்.

ஆயுத பூஜைக்கே தியேட்டர்கள் திறக்க கோரிக்கை வைத்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை குழுவுடன் ஆலோசித்து பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே