இதை பற்றி தகவல் அளித்தால் வெகுமதி – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தடையை மீறி ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களிடமோ, மின்னஞ்சல், கடிதம், வாட்ஸ் அப் மூலமாகவோ புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே