தலைமைக் கழகத்தில் இன்று கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக, புரட்சித் தலைவி அம்மா பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசின் திட்டங்களை கிராமம் முதல் நகரங்கள் வரை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரான அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை அரசு செய்து வருகிறது. ஆனால் கிராமம் முதல் நகரங்கள் வரை நாம் போட்ட திட்டங்கள் முழுமையாக போய் சேரவில்லை.

நாம் போட்ட திட்டங்கள் மக்களுக்கு புரியவைக்க நீங்கள் உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  • பேரவையில் நான் இருக்கும்போதும் சரி, தற்போதும் சரி தன்னலமற்று உழைத்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
  • தன் வாழ்நாள் முழுக்க மக்களுக்காக வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
  • முன்பு ஜெயலலிதா அவர்கள் சொன்னதைபோல ஏழை எளியவர்களுக்கு ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும்.
  • ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகளும் தங்களால் இயன்றதை ஏழைகளுக்கு செய்யுங்கள்.
  • மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குங்கள் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே