ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை – கோவை ராமகிருஷ்ணன்

பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிடில் 23 ஆம் தேதி அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ராமர், சீதை உருவங்களை நிர்வாணமாக கொண்டுவந்து தந்தை பெரியார் செருப்பால் அடித்ததாக பொய்யான செய்தியை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பரப்பியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கு ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கோவை ராமகிருஷ்ணன், இல்லையெனில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே