கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்காக தனியார் பேருந்துகளில் டிக்கெட் புக் செய்யும் பயணிகள் தொடர்ச்சியான புகார்களை தெரிவித்து வந்தார்கள்.
சாதாரணமாக சென்னையிலிருந்து கோவை செல்வதற்கு 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருப்பது வழக்கம். ஆனால் விழாக்காலங்களில் குறிப்பாக தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகை நாட்களில் டிக்கெட் விலை இரண்டு மடங்காக கூடுவது வழக்கம்.
இதுதொடர்பாக அரசுக்கு பலமுறை பல ஆயிரக்கணக்கான புகார்கள் ஒவ்வொரு முறையும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில், இந்த வருட தீபாவளிக்கும் டிக்கெட் விலை இரண்டு மடங்காக விற்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தற்போது இவ்விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு ‘டிக்கெட் விலை அதிகமாக விற்றால் உடனடியாக பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்’ என்ற எச்சரிக்கையால் உடனடியாக வழக்கமான விலையில் தற்போது டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.