#KeralaLandslide :இன்று மேலும் இரு உடல்கள் மீட்பு… பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு!!

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தி்ல், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் அதி கனமழையால், கடந்த 6 ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் 10ம் நாளாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், 56 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 12 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காணாமல் போனவர்களை 12 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே